Educational Website (Agriculture)

Breaking

வெள்ளி, 9 செப்டம்பர், 2022

விவசாயத்தில் பஞ்ச கவ்யா(Panchakavya)


 

பஞ்ச கவ்யா என்பது இயற்கைப் பீடைநாசினியாகவும் வளர்ச்சி ஊக்கியாகவும் பயன்படுத்தப்படுகின்ற ஒரு கலவையாகும். எமது பிரதேசங்களில் இலகுவாகக் கிடைக்கின்ற பொருட்களைப் பயன்படுத்தி இதனை இலகுவாகத் தயாரித்துக் கொள்ள முடியும்.



10 லீற்றர் பஞ்ச கவ்யா தயாரிக்கத் தேவையான பொருட்கள் 


நாட்டுப் பசுமாட்டுக் கன்றின் பசுஞ் சாணம் 2.5 கிலோகிராம்

பசுமாட்டுச் சிறுநீர் 1.5 லீற்றர்

காய்ச்சி ஆறவைத்த பசும்பால் 1 லீற்றர்

பசுமாட்டுத் தயிர் - 1 லீற்றர்

பசுநெய் - 250 கிராம்

தென்னங்கள் - 1 லீற்றர்

நாட்டுச் சக்கரை - 0.5 கிலோகிராம்

இளநீர் - 1.5 லீற்றர்

நன்கு பழுத்த வாழைப்பழம் -

இங்கு தென்னங்கள்ளுக்குப் பதிலாக 1 லீற்றர் இளநீரை காற்றுப் புகாத போத்தலில் ஒரு வாரம் அடைத்து வைத்துப் பின்னர் பெறப்படும் திரவத்தைப் பயன்படுத்த முடியும்.


செய்முறை

 

1 ஆம் நாள்

2.5 கிலோகிராம் பசுமாட்டுச் சாணத்துடன் 250 கிராம் பசுநெய்யை நன்கு பிசைந்து கலந்து உருண்டையாக்கி 15 – 25 லீற்றர் கொள்ளளவுள்ள பீப்பாவிற்குள் வைத்து மூட வேண்டும்.

4 ஆம் நாள்

பீப்பாவின் மூடியைத் திறந்து பசும்பாலும் சக்கரையும் சேர்ந்த கலவை, தயிர், நன்கு பிசையப்பட்ட வாழைப்பழம், இளநீர் ஆகியவற்றை பீப்பாவினுள் சேர்க்க வேண்டும். பின்பு பீப்பா மூடப்பட வேண்டும்.

10 ஆம் நாள் வரை காலையும் மாலையும் பீப்பாவினுள் உள்ள கலவை நன்கு கலக்கப்படுவதுடன் கலக்கிய பின் கட்டாயமாக பீப்பா மூடப்பட வேண்டும்.

11 ஆம் நாள்

தென்னங்கள் அல்லது ஒரு வாரம் அடைத்து வைக்கப்பட்ட இளநீர் பீப்பாவினுள் ஊற்றப்பட வேண்டும். பின்பு 19 ஆம் நாள் வரைக்கும் பீப்பா மூடப்பட்டிருக்க வேண்டும்.

19 ஆம் நாள் பஞ்ச கவ்யா தயாராகிவிடும்.



பயன்படுத்தும் முறை


ஒரு முறை தயாரிக்கப்பட்ட பஞ்ச கவ்யா கரைசலை 06 மாதங்கள் வைத்துப் பயன்படுத்த முடியும்.

1 லீற்றர் நீருடன் 30 மில்லி லீற்றர் பஞ்ச கவ்யா கரைசலைக் கலந்து பயன்படுத்த முடியும். 15 நாட்களுக்கு ஒரு முறை காலை வேளையில் அல்லது மாலை வேளையில் பயிர்களுக்குத் தெளித்தல் போதுமானது. 

close