Tamil Agri School

Educational Website (Agriculture)

Breaking

புதன், 24 மே, 2023

புதன், மே 24, 2023

ஒரு குழந்தையின் வளர்ச்சி மற்றும் விருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்


ஒரு குழந்தையின் “வளர்ச்சி” எனப்படுவது, குழந்தையின் உயரத்திலும் நிறையிலும் ஏற்படும் மீளா அதிகரிப்பாகும். இங்கு வளரச்சி வேகத்தில் தனியாள் வேறுபாடுகள் காணப்படுகின்றன.

குழந்தையின் “விருத்தி” எனப்படுவது, குழந்தையின் வயது அதிகரித்துக் கொண்டு செல்லும் போது குழந்தையின் உருவத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு மேலதிகமாக அவருள் அபிவிருத்தியடைகின்ற சிக்கல் நிறைந்த திறன்கள் காரணமாக ஏற்படும் மாற்றமாகும். 

ஒரு குழந்தையின் வளர்ச்சியிலும் விருத்தியிலும் செல்வாக்குச் செலுத்துகின்ற காரணிகளை பிரதானமாக 03 வகையாகப் பிரிக்கலாம் அவையாவன,

பரம்பரைக் காரணிகள் 

சூழல் காரணிகள்

முதிர்ச்சியும் கற்றலும்


பரம்பரை

இயல்புகள் ஒரு பரம்பரையிலிருந்து இன்னொரு பரம்பரைக்கு மரபணுக்க;டாக கடத்தப்படும் செயற்பாடு “பரம்பரை” எனப்படும். பிள்ளைகள் கருத்தரிக்கும் போது பெற்றோர்களினூடாக பிறப்புரிமையாக்கிக் கொள்ளும் காரணிகள் பரம்பரைக் காரணிகள் எனப்படும். குழந்தையானது தாயின் வயிற்றில் ஒரு கருவாக உண்டாகும் போதே நிறவூர்;த்தங்கள் மூலம் பரம்பரைக் இயல்புகள் அக் குழந்தையின் பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு கடத்தப்படுகிறது. 

பரம்பரை இயல்புகள் மூலம் கடத்தப்படும் அம்சங்கள்

தோலின் நிறம், கண்களின் அமைப்பு, முடியின் அமைப்பு, உயரம் போன்ற உடல் இலட்சணங்கள்

சங்கீதம், நுண்ணறிவு போன்ற ஆற்றல்கள்

உடல் நோய்கள் (இதய நோய், நீரிழிவு Nநூய்)

உடற் குறைபாடுகள் (பார்வைக் குறைபாடு, கேட்டற் குறைபாடு, மந்த புத்தி)


சூழல்

பொதுவாக குழந்தை வளர்ச்சி மற்றும் விருத்தியில் பரம்பரை எனும் எண்ணக்கருவுக்கு சம அளவில் சூழலும் செல்வாக்குச் செலுத்துகிறது. ஒருவரின் பிறப்பிற்கு பின்னுள்ள சூழலைப் போன்று பிறப்பிற்கு முன்னுள்ள சூழலும் அவரது வளர்ச்சியிலும் விருத்தியிலும் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றது.

பிறப்புக்கு முன்னுள்ள சூழல்

குழந்தையின் பிறப்புக்கு முன்னுள்ள சூழலைக் கருதுவோமாயின், இது அகச் சூழல் எனவும் அழைக்கப்படுகின்றது. இவ் அகச் சூழல் தாயின் கருப்பையையே குறிக்கிறது. ஒரு குழந்தை கருவுற்றது முதல் தாயின் கருவறையிலிருந்து வெளியே வரும் வரைக்கும் இவ் அகச் சூழலில் வாழ்கிறது. குழந்தையானது தாயின் கருப்பையில் இருக்கும் போது பின்வரும் விடயங்கள் அக் குழந்தையின் சீரான வளர்ச்சி மற்றும் சீரான விருத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. 


1. தாய் சிறந்த உடல் நலத்துடன் இருத்தல்

2. தாய் போசாக்கான உணவுகளை உட்கொள்ளல்

3. தாயின் சிறந்த மன எழுச்சிகள்

4. தாயின் நேர் மனப்பாங்குகள்


குழந்தை கருவில் இருக்கும் போது தாய் மேற்கொள்ளும் பின்வரும் செயற்பாடுகள் குழந்தையின் வளர்ச்சியிலும் விருத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.


1. போதைப் பொருட் பாவனை

2. ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ணல்

3. அதிகமாகப் பயப்படுதல்

4. எதிர் மனப்பாங்குடன் இருத்தல்

5. எந்த நேரமும் சோகமான நினைவுகளுடன் இருத்தல்

6. வியாதியுற்றிருத்தல்

7. அதிகளவில் மருந்துப் பொருட்களைப் பாவித்தல்


உடல,; உள மற்றும் மனவெழுச்சி ரீதியில் ஆரோக்கியமான தாய் ஒருவராலேயே சீரான வளர்ச்சி, விருத்தி கொண்ட ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க முடியும். 


பிறப்புக்கு பின்னுள்ள சூழல்

பிறந்த பின் ஒரு குழந்தை வழும் சூழல் “பிறப்புக்கு பின்னுள்ள சூழல்” எனப்படும். ஒரு குழந்தையின் வளர்ச்சி மற்றும் விருத்தியில் பிறப்புக்கு பின் உள்ள சூழலின் செல்வாக்கானது அக் குழந்தை தாயின் கருப்பையிலிருந்து வெளியே வந்தது முதல் ஆரம்பிக்கின்றது. ஒரு சூழலில் காணப்படும் தூண்டிகள் மூலம் பிள்ளையின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டாலேயே அது “பிள்ளையின் சூழல்” ஆக அமையும்.

பிறப்புக்குப் பின்னுள்ள சூழலானது பொதுவாக இருவகைப்படுத்தப்படுகிறது.

1. பௌதீகச் சூழல்

2. சமூகச் சூழல் 


பௌதீகச் சூழல்

இங்கு குழந்தையின் பௌதீகச் சூழல் எனப்படுவது குழந்தையைச் சுற்pறக் காணப்படுகின்ற பொருட்களைக் குறிக்கின்றது. குழந்தைகள் தாம் விரும்பியபடி விளையாட்டுப் பொருட்கள், பேணிகள், போத்தல் மூடிகள், துணிகள் போன்ற பொருட்களுடன் பிள்ளை சுதந்திரமாக விளையாடும் போது அவற்றின் நிறங்கள், உருவங்கள், தன்மைகள், அளவுகள்  தொடர்பாக தனது புலன்களினூடு அறிந்து தனது அறிவை விருத்தி செய்து கொள்கின்றது. மேலும் பிளளை அப் பொருட்கள் தொடர்பாக வினாக்களை எழுப்பும் போது சமூத்திலுள்ளவர்கள் பின்ளைக்கு உரிய பதில்களை விளங்கிக் கொள்ளக்கூடியவாறு அளிப்பார்களேயானால் அச் சூழல் பிள்ளையின் விருத்திக்கு ஏற்றதாக அமையும்.


சமூகச் சூழல்

பிள்ளையின் சமூகச் சூழல் எனப்படுவது பிள்ளையைச் சூழவுள்ள மனிதர்களையே குறிக்கின்றது. இச் சமூகச் சூழலில் பின்வருவோர் உள்ளடங்குவர்.


பிள்ளையின் பெற்றோர் 

சகோதரர்கள் 

உறவினர்கள் 

அயலவர்கள்

நண்பர்கள் 

ஆசிரியர்கள் 


மேற்குறிப்பிட்டவர்களின் செல்வாக்கானது பிள்ளையின் நடத்தை மாற்றத்தில் அதிமாகக் காணப்படுகின்றது. இச் சமூகத்திலுள்ளவர்களைப் பார்த்தேர் அல்லது அவர்களது வழிநடத்துதலுக்கமைவாகவோ பிள்ளை அன்பு செலுத்துதல், ஏனையவர்களுடன் பேசும் விதம், உதவுதல், விட்டுக்கொடுத்தல், இடத்தின் தன்மைக்கமைய செயற்படுதல், நேர முகாமைத்துவம் போன்ற திறன்களை தன்னுள் வளர்த்துக்கொள்கின்றது. 

மேலும் சமூகச் சூழலிலிருந்து பிள்ளைக்கு தூணடலை ஏற்படுத்துகின்ற அல்லது பிள்ளை கற்றுக்கொள்கின்ற அனைத்து விடயங்களும் பிள்ளையின்; வளர்ச்சியிலும் விருத்தியிலும் நேரான அதிகரிப்பை ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் இச் சமூகத்தில் தவறான முன்னுதாரணங்களும் இருக்கத் தான் செய்கின்றன. உதாரணமாக பிளளையின் குடும்பத்தில் பெற்றோருக்கிடையில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுமாயின் பிள்ளை குடும்பம் தொடர்பாக தவறான புரிதலைப் பெற்றுக்கொள்வதுடன் அதன் மனவெழுச்சிகளும் மறையானதாகக் காணப்படும்.


முதிர்ச்சியும் கற்றலும்

ஒரு மனிதனில் முதிர்சியினால் கற்றல் நடைபெறுமே தவிர கற்றலினால் முதிர்வு ஏற்படாது. எனினும் முதிர்ச்சியும் கற்றலும் ஒன்றுடனொன்று மிகவும் நெருங்கிய எண்ணக்கருக்களாகும். பிள்ளை குறிப்பிட்ட ஒரு விடயத்தைக் கற்பதற்கு பொருததமான முதிர்ச்சியை அடைந்திருக்க வேண்டும்.

முதிர்ச்சி என்பது மரபியல் ரீதியான நிகழ்ச்சித் திட்டத்திற்கமைவாக வயது அதிகரிப்புடன் பிள்ளையின் நடத்தையில் மாற்றம் ஏற்படும் செயற்பாடாகும். 

கற்றல் என்பது பிள்ளை தனது புறச் சூழலிலிருந்து புலனுறுப்புகள் மூலம் தூண்டலைப் பெற்று அதன்படி தனது நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும்.

முதிர்வானது பிள்ளை கருவில இருக்கும் போதே ஆரம்பமாகிறது. அந்த வகையில் பிள்ளை பிறக்கும் போது அதன் முதிர்ச்சி குறித்த மட்டத்தில் காணப்படும்.

முதிர்ச்சியினூடாகப் பிள்ளையினிடத்தில் புதிய இயல்புகளும் புதிய தொழிற்பாடுகளும் தோன்றுகின்றன. பிள்ளையின் வயது அதிகரிக்கும் போது வெவ்வேறு வகையான ஆகாரங்களை சமிபாடடையச் செய்தல், நடத்தல் போன்ற செயற்பாடுகள் முதிர்ச்சியின் விளைவாகவே ஏற்படுகின்றது. பிளளைக்கு எவ்வளவுதான் பயிற்சியளித்தாலும் குறித்த வயதை அடையும் வரை நடக்கமாட்டாது. நடப்பதற்கு ஏற்ற முதிர்ச்சி வந்தவுடன் பிளளை கற்றலினால் நடக்கப் பழகுகின்றது. 

பிள்ளை உரிய முதிர்ச்சியை அடைந்த பின் பேசத் தொடங்குகிறது. பெரியவர்கள் அப் பிள்ளையுடன்  பேசும் போது பிள்ளையானது தனது பேசும் திறனை மேலும் விருத்தி செய்யும் வகையில் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளத் தொடங்குகிறது. பொருட்களை கடிப்பது, கைகளை உயர்த்துதல் போன்ற செயற்பாடுகளுககு பிள்ளைக்கு முதிர்ச்சியேயன்றி கற்றல் அவரியமில்லை. ஆனால் எழுதுதல், கத்தரியால் வெட்டுதல் போன்ற திறன்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் விருத்தி செய்வதற்கும் கற்றல் மிகவும் அவசியமாகும். 

முதிர்ச்சியினால் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் சம வயது எல்லைக்குள் காணப்படும். ஆனால் வளர்ச்சி வேகமானது ஆளுக்காள் வேறுபடுவதால் முதிர்ச்சியினால் ஏற்படும் மாற்றங்களை எல்லாரிலும் ஒரே நேரத்தில் காண முடிவதில்லை.   

குழந்தையின் வளர்ச்சி மற்றும் விருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் ஏனைய காரணிகள்


பால் நிலை

குடும்பத்தினரின் செல்வாக்கு

ஊட்டச் சத்து

சமூக பொருளாதார நிலைமை


By : Paluvoor Jeeva

 

புதன், 17 மே, 2023

புதன், மே 17, 2023

Agriculture & Food Technology | O/L 2023(2022) | Model Exam Paper 02 with Answers | Ministry of Education (*72*)

 

Question Paper
Answer

Please wait 90 seconds to download your file.


ஞாயிறு, 14 மே, 2023

ஞாயிறு, மே 14, 2023

Agriculture & Food Technology | O/L 2023(2022) | Model Exam Paper 01 with Answers | Ministry of Education (*71*)

 


Question Paper


Answers
Please wait 90 seconds to download your file.


வெள்ளி, 5 மே, 2023

வெள்ளி, மே 05, 2023

விசேட தேவையுடைய பிள்ளைகளும் ஆசிரியர்களும்

 பாடசாலைக்கு வருகின்ற மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. அவர்கள் வெவ்வேறுபட்ட சமூகங்களிலிருந்தும் பல்வேறு குடும்பப் பின்னணிகளிலிருந்தும் பாடசாலைக்கு வருகின்றனர். அவர்களது பழக்கவழக்கங்கள், செயற்பாடுகள் என்பன தனித்துவமானவையாகக் காணப்படுகின்றன.


பாடசாலைக்கு வருகைதருகின்ற மாணவர்கள் யாவருமே கல்வியைப் பெறும் உரிமையுடையவர்கள். மாணவர்களிடத்தில் காணப்படுகின்ற உடல், உள, மனவெழுச்சிக் குறைபாடுகளோ அல்லது வசதியீனங்களோ அவர்களை கல்வியைப் பெறுவதிலிருந்து தடுத்துவிட முடியாது. அதற்கு நாம் இடமளிக்கவும் கூடாது. வகுப்பறையிலுள்ள மாணவர்களில் அனேகர் ஏதோ ஒரு வகையில் குறைபாடுடையவர்களாகக் காணப்படுவது வழமையானதொன்றாகும். எனினும் அவ்வாறான மாணவர்களுக்கும் கல்வியைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது கல்வித் துறையில் உள்ள ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய கல்வி அதிகாரிகள் போன்றோரது மறுக்கமுடியாத கடமையாகும்.


பொதுவாக பின்வரும் பிரச்சினைகளையுடைய மாணவர்கள் வகுப்பறைகளில் காணப்படுகின்றனர்.

 புலன்கள் ரீதியான குறைபாடுகள்

 ஏனைய உடலியற் குறைபாடுகள்

 உளவியற் குறைபாடுகள்

 பிறழ்வான நடத்தை

 மெல்லக் கற்றல் நிலை

 மீத்திறன் தன்மை

 எழுதுவதில் சிரமம்

 வாசிப்பதில் சிரமம்

 கிரகித்தலில் சிரமம்

 மொழி பேச்சுக் குறைபாடு


மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளைக் கொண்ட மாணவர்களை கற்றலில் இடர்படுகின்ற மாணவர்கள் என நாம் அடையாளப்படுத்த முடியும். இங்கு கற்றலில் இடர்படுவோர் எனில் “ஒரு தமக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பினால் ஏனைய சாதாரண மாணவர்களைப் போல் கற்றலில் ஈடுபட சிரமப்படுவோர்” என்பதாகும். இவ்வாறு கற்றலில் இடர்படுகின்ற மாணவர்களையும் அறிவு, மனப்பாங்கு, திறன் என்பவற்றில் தேர்ச்சியடையச் செய்வது ஆசிரியரின் கடமையாகும்.


ஒரு ஆசிரியர் பல்வேறுபட்ட வகிபாகங்களைக் கொண்டிருக்கின்றார். அவையாவன,

 வழிகாட்டுபவர்

 ஆய்வாளர்

 ஆலோசனை வழங்குபவர்

 ஊக்குவிப்பாளர்

 மதிப்பிடுபவர்

 பிரச்சினைகளைத் தீர்ப்பவர்

 இனங்காண்பவர்

 முகாமையாளர்

 தலைமைத்துவம் வழங்குபவர்

 கற்றலுக்கு உதவுபவர் என்பனவாகும்.


கற்றலில் இடர்படுகின்ற விசேட தேவைகள் சார் கல்வி தேவைப்படுகின்ற மாணவர்களுக்கு க்றபிக்கின்ற ஒரு ஆசிரியர் மேலே குறிப்பிடப்பட்ட வகிபாகங்களுக்கூடாகவே அவ் மாணவர்களுக்கு கல்வியை வழங்க முடியும்.

ஒரு ஆசிரியர் கற்றலில் இடர்படுகின்ற மாணவர்களுக்கு கற்றல் வசதிகளை ஏற்படுத்துவதற்கு பின்வரும் படிமுறைக;டாக பயனிக்க வேண்டும்.

 மாணவர்களை அவதானித்தல்

 கற்றலில் இடர்படுகின்ற மாணவரை இனங்காணல்

 மாணவர் கற்றலில் இடர்படுவதற்கான காரணத்தை அறிதல்

 மாணவருக்கும் மாணவரின் பெற்றோருக்கும் பொருத்தமான ஆலோசனைகளை வழங்குதல்

 மாணவர் சிரமமின்றி கற்பதற்குரிய வசதிகளை ஏற்படுத்துதல்

 குறித்த மாணவரை தொடர்ச்சியாக அவதானித்து அவ்வப்போது மாணவருக்குத் தேவையான ஆலோசனைகளையும் மேலதிக உதவிகளையும் வழங்குதல்


சாதாரண வகுப்பறையில் காணப்படுகின்ற சாதாரணமான மாணவர்கள் மத்தியிலேயே கற்றலில் இடர்பாடுள்ள மாணவர்களும் காணப்படுவர். ஒரு ஆசிரியர் முதலில் மாணவர்களை அவதானிப்பதன் மூலம் இவ்வாறானவர்களை இணங்கண்டாலேயே மேற்கொண்டு அவர்களது கற்றல் செயற்பாடுகiளுக்கு உதவி செய்ய முடியும். விசேட தேவைகள் சார் கல்வி அறிவுள்ள ஒரு ஆசிரியரால் மாத்திரமே மாணவர்களின் துலங்கல், அவர்களது ஏனைய செயற்பாடுகள் என்பவற்றைக் கொண்டு கற்றலில் இடர்பாடுள்ள மாணவர்களை இனங்காண முடியும். ஏனைய விசேட தேவைகள் சார் கல்வி தொடர்பாக அறிந்திராத ஆசிரியர்களால் கற்றலில் இடர்படுகின்ற மாணவர்களை இனங்காண்பது கடினமான விடயம். இவ் விசேட தேவை சார் கல்வியறிவற்ற சில ஆசிரியர்கள் கற்றலில் இடர்படுகின்ற மாணவர்களை அடையாளம் காணத்தவறி அம் மாணவர்களுக்கு பாரிய துரோகம் இளைப்பது மட்டுமன்றி சாதாரண மாணவர்களையும் விசேட தேவையுடைய மாணவர்களாக தவறாக இனங்காண்பதையும் அறிய முடிகிறது.

உதாரணம் : முன்னைய நாட்களில் அன்னப்பிளவுள்ள பிள்ளைகளும் விசேட தேவையுடைய பிள்ளைகள் என தவறாகக் கணிக்கப்பட்டனர்.


மேலும் இவ்வாறு இனங்காணப்பட்ட மாணவர்கள் கற்றலில் இடர்படுவதற்கான பிரதான காரணம் உடல் ரீதியான குறைபாடா? அல்லது உளரீதியான பிரச்சினையா? அல்லது மனவெழுச்சி ரீதியான கோளாறா? ஒரு ஆசிரியர் பிரித்தறிவதும் அவசியமாகும். இச் செயற்பாடும் விசேட தேவைகள் சார் கல்வி அறிவுள்ள ஆசிரியராலேயே முடியும்.


உதாரணமாக, ஒரு மாணவனை ஆசிரயர் அழைக்கும் போது அம் மாணவன் எதுவித துலங்கலுமின்றி இருப்பானாகில் அம் மாணவனுக்கு காது கேட்காமை (உடற்குறைபாடு) என்ற பிரச்சினை உள்ளது என்பதை ஆசிரியர் புரிந்துகொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். ஒரு மாணவன் எந்த நேரமும் எதையோ ஒன்றைப் பற்றி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதை பார்க்கும் ஆசிரியர் ஒருவருக்கு அம் மாணவன் உளரீதியாக பாதிக்கப்பட்டவன் என்பது புலப்பட வேண்டும். ஒரு மாணவன் ஆசிரயர் ஏதேனும் கற்றலுடன் தொடர்பான வேலைகளைக் கொடுத்தால் அதை செய்து முடிக்கும் வரையில் பதற்றமாகவே காணப்படுவானாயின் அவனுக்கு மனவெழுச்சிரீதியான பிரச்சினை உண்டு


என்பதை ஆசிரியர் புரிந்துகொள்வது அவசியமாகும். இவ் உதாரணங்களில் கூறப்பட்ட விடயங்களை ஒரு ஆசிரியர் வகை பிரித்து அறிய வேண்டுமெனின் அவ் ஆசிரியருக்கு விசேட தேவைகள் சார் கல்வி அறிவு இருப்பது மிகவும் அவசியமாகும்.


ஆசிரியர் மாணவன் கற்றலில் இடர்படுவதற்கான பிரதான காரணத்தை அறிந்த பின்பு அம் மாணவன் குறித்த பிரச்சினையினை மேறகொண்டு கற்றலில் ஈடுபடுவதற்கான ஆலோசனைகளை வழங்குவது அவசியமாகும். உதாரணமாக பகுதியளவில் காது கேளாமைக் குறைபாடுள்ள மாணவனுக்கு வகுப்பறையில் முன் வரிசையில் அல்லது ஆசிரியருக்கு அண்மையில் அமர்ந்திருக்க வேண்டும். என்பது போன்ற ஆலோசனைகளை ஆசிரியர் வழங்க வேண்டும்.


மேலும் கற்றலில் இடர்படுகின்றனர் என அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் ஏனைய மாணவர்களைப் போல் சிரமமின்றிக் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மாணவர்களுக்கு ஆசரியர் வகுப்பறையிலேயே சில வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.


உதாரணமாக பகுதியளவில் பார்வைக் குறைபாடுடைய பிள்ளைக்கு ஒரு ஆசிரியர் பின்வரும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

 முன்வரிசையில் அமரச் செய்தல்

 போதிய வெளிச்சம் கிடைக்கக்கூடிய இடத்தில் அமரச் செய்தல்.

 கரும்பலகையில் எழுத்துக்களை பெரிதாக எழுதுதல்

 பார்வைக் குறைபாடுடைய மாணவர்களுக்கு தனியான தகவல் அட்டைகளை வழங்குதல்.


மேற்படி உதாரணத்தை எடுத்து நோக்குவோமாயின் விசேட தேவைகள் சார் கல்வி அறிவுள்ள ஆசிரியர் ஒருவருக்கே பார்வைக் குறைபாடுடைய மாணவர்களுக்கு ஆலோசனையை வழங்குவதுடன் வகுப்பறையில் அவ்வாறான மாணவர்களுக்கான வசதிகளையும் ஏறபடுத்திக்கொடுக்க முடியும்.


மேற்படி விடயங்களின் அடிப்படையில் இன்றைய வகுப்பறையிலுள்ள மாணவர்களுக்கு வெற்றிகரமான கற்பித்தலை மேற்கொள்ள அனைத்து ஆசிரியர்களும் விசேட தேவைகள் சார் கல்வி என்ற எண்ணக்கரு தொடர்பாக போதிய விளக்கம் பெற்றிருப்பது அவசியம் என்பது உறுதியாகின்றது.


By : Paluvoor Jeeva

சனி, 10 டிசம்பர், 2022

சனி, டிசம்பர் 10, 2022

A/L Agricultural Science | Handout | ஆளுகை நிபந்தனைகளின் கீழான பயிர்ச்செய்கையும் மண்ணின்றிய பயிர்ச்செய்கை முறைகளும்(*70*)

Loading...
Please wait 60 seconds to download this file.


வெள்ளி, 9 டிசம்பர், 2022

வெள்ளி, டிசம்பர் 09, 2022

A/L Agricultural Science | Handout | Unit 06, 07 & 08(*69*)

Loading...
Please wait 60 seconds to download this file.


வியாழன், 8 டிசம்பர், 2022

வியாழன், டிசம்பர் 08, 2022

A/L Agricultural Science | Handout | பயிர் தாபிப்பு(*68*)

Loading...
Please wait 60 seconds to download this file.


வியாழன், டிசம்பர் 08, 2022

A/L Agricultural Science | Handout | நிலம் பண்படுத்தல்(*67*)

Loading...
Please wait 60 seconds to download this file.


புதன், 7 டிசம்பர், 2022

புதன், டிசம்பர் 07, 2022

A/L Agricultural Science | Handout| தாவர இனப்பெருக்கம்(*66*)

Loading...
Please wait 60 seconds to download this file.


புதன், டிசம்பர் 07, 2022

A/L Agricultural Science | தாவரங்களை இனம்பெருக்குதல்(*65*)


Loading...
Please wait 60 seconds to download this file.



 

close